Saturday, June 14, 2008

டோ ண்டு சார் கேள்விகளுக்கு உடனடி பதில்கள், ச.சங்கருக்கு 4 கேள்விகள்!

டோண்டு ராகவன் அவர்கள், அவரது இந்தப் பதிவில் என்னிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு எனது பதில்கள் கீழே. இந்த "4 கேள்விகள்" சமாச்சாரம், சங்கிலித் தொடர் போல தொடர வேண்டும் என்று டோ ண்டு சார் சொல்லியிருப்பதால், நான் இப்பதிவின் முடிவில் கேட்டிருக்கும் நான்கு கேள்விகளுக்கு நண்பர் ச.சங்கரை (ஒரு பதிவிட்டு) பதிலளிக்குமாறு அழைக்கிறேன்.

1. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம், இந்த டோ ண்டு ராகவன் தான் வலைப்பூவுக்கு வந்ததே உங்களால்தான் என்று கூவிக் கூவி வருவதை நினைத்து உங்கள் ரியேக்ஷன்கள் என்ன?

கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும், உங்களைப் போன்ற வலையுலக தாதாவுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது பற்றி சற்று பெருமையே என்பது தான் நிஜம் !!! இளையவர் முதல் பெரியவர் வரை உங்கள் பாப்புலாரிட்டி கொடி கட்டிப் பறப்பது குறித்து கொஞ்சம் பொறாமையும் கூடத் தான் :) சற்று சீரியஸாக, நல்ல வாசிப்பனுபவம் மிக்க, பொதுவாக அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் உடைய, பல மொழிகளில் புலமை மிக்க, சலிப்பில்லாமல் உழைக்கும் உங்களை தமிழ் வலையுலகுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சியே ! வலையுலகு களை கட்டுவது உங்களைப் போன்றவர்களால் தான் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை !

2. ஸ்கூலில் இம்மாதிரி வாத்தியார்களுக்கெல்லாம் செல்லப் பிள்ளையாக இருந்திருக்கிறீர்கள் (உதாரணம் டி ராமானுஜம் அவர்கள்). இதனால் மற்றப் பசங்களின் பொறாமை மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்திருக்குமே, இதை எப்படி சமாளித்தீர்கள்?

பலத்த போட்டி இருந்தது. பொறாமை இல்லை அல்லது சில நண்பர்கள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். முக்கியமாக, எனது பள்ளித் தோழர்களுக்கு எனது ஏழ்மை நிலை தெரிந்திருந்ததால், என் மீது வாஞ்சை இருந்தது, அதனால் நான் நன்றாக படித்தது குறித்து அவர்களுக்கு பொறாமை கிடையாது என்பது என் எண்ணம்.

ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்ன நிகழ்வை நீங்கள் சுட்டுகிறீர்கள் அல்லவா ? இப்படி ராமானுஜம் போன்ற ஆசிரியர்கள் சில சமயங்களில் அடித்த கூத்தினால், சிலருக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம் :) பள்ளி நாட்கள் (ஏழ்மையிலும்) மிக இனிமையாகவே கழிந்தன.
வாசிக்க:
http://balaji_ammu.blogspot.com/2004/10/iv_26.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
http://balaji_ammu.blogspot.com/2005/01/7.html


3. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா இங்கிலாந்து (என்று நினைக்கிறேன்) கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, மேலே ஆடி மேட்சையும் ஜெயித்ததே. இதற்கு முன்னால் இரு முறை அவ்வாறு நடந்ததாகக் கேள்வி. அவற்றின் விவரங்கள் தர இயலுமா?

நீங்கள் குறிப்பிடுவது இந்தியா vs ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன். 2001-இல் நடந்தது. இந்தியா ஃபால்லோ ஆன் வாங்கி, பின்னர் லஷ்மணும் (281), டிராவிட்டும்(180) ஜோடி சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியதில், கல்கத்தாவில் ஸ்டீவ் வா தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி மண்ணைக் கவ்வியது. அவர்களது தொடர் (16 போட்டிகள்) வெற்றியும் முடிவுக்கு வந்தது. அவர்களது 'Invincibility' ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

1981-இல் ஹெடிங்க்லியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆட்டம் ஒரு Real Classic. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தது. மைக் பிரயர்லி (இவரை தலைமைப் பண்பு, ஸ்லிப் ஃபீல்டிங் ஆகியவற்றிற்காகவே அணியில் வைத்திருந்தனர் என்றால் அது மிகையில்லை!) தலைமை தாங்கிய இங்கிலாந்து அணி 174 ரன்கள் எடுத்து follow-on வழங்கப்பட்டு, இரண்டாவது இன்னிங்க்ஸிலும் 135-7 என்ற மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, இயன் பாத்தம், வால் முடிவாட்டக்காரர்களோடு (Tailenders:)) கூட்டு சேர்ந்து ஒரு காட்டு காட்டியதில், இங்கிலாந்து 356 ரன்கள் குவித்து (பாத்தம் 149 நாட் அவுட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 130 ரன்களை நிர்ணயித்தது. பின்னர், ஆஸ்திரேலிய அணி பாப் வில்லிஸின் (8-43) வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், 111-க்கு (இதை நெல்சன் என்று அழைப்பர்! அதாவது, அதிர்ஷ்டமில்லா எண்!) சுருண்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது வரலாறு !

இதற்கு முன்னர், 1894-85 Ashes-இல், ஸிட்னியில் நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 586 ரன்கள் குவித்த பிறகு, இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது. Follow-on செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து, திடமாக ஆடி, 437 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 177 ரன்களே ! நான்காவது நாள் முடிவில், ஆஸ்திரேலியா 113-2 என்ற ஸ்கோரில் Driver's seatஇல் இருந்ததென்னவோ நிஜம் ! இரவு பெய்த மழையின் காரணமாக, இறுதி நாளில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு பயங்கரமாக உதவியதில், ஆஸ்திரேலியாவின் ஆட்டம் க்ளோஸ் :) 166 ரன்களில் சுருண்டு, இங்கிலாந்து 10 ரன்களில் வென்று ஒரு Famous Victory !!! தொடரையும் 3-2 என்ற கணக்கில், இங்கிலாந்து வென்றது.

4. மனைவி/மகள்களின் பிறந்த நாளை மறந்து அசடு வழிந்தது உண்டா?

மகள்களின் பிறந்த நாளை நிச்சயம் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை !!! மனைவியிடம் (வேலைப்பளு காரணமாக) ஓரிரு முறை நிகழ்ந்துள்ளது. ஒரு சமயம், மனைவியின் பிறந்த நாளுக்கு வேண்டி (ஒரு வாரத்திற்கு முன்னதாகவே) ஒரு பரிசு வாங்கி வைத்து விட்டு, அதை பிறந்த நாளில் கொடுக்க மறந்து, திடீரென்று ஞாபகம் வந்து, அவரை அன்றிரவு ஒரு மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி, வாழ்த்து சொல்லிக் கொடுத்தது, அசடு வழிவதில் சேருமா என்று டோ ண்டு சார் தான் கூற வேண்டும் :)

ச.சங்கருக்கு 4 (சற்று ஏடாகூடமான) கேள்விகள்:

1. சமீபத்தில் நீ மேற்கொண்ட தாய்லாந்து விசிட்டின்போது நடந்த சுவாரசியமான நிகழ்வு பற்றிக் கூற முடியுமா ? "களியாட்டங்கள்" பற்றி விவரமாகக் கூறினால், தன்யனாவேன் :)

2. ஒரு கால கட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தத்தில் (அது குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள் கூட!) நம்பிக்கை வைத்திருந்த நீ, எப்போது ஏன் மாறினாய் ? நலிந்தவர் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்கும் சந்தர்ப்பவாத இந்திய (போலி) கம்யூனிஸ்ட்களைப் பற்றி உன் கருத்துகள் யாவை ?

3. ஆணாதிக்கவாதிகள் போல் பெண்ணாதிக்கவாதிகளும் இருக்கிறார்கள் தானே ! அவர்களை எப்படி அடையாளம் காண்பது ? அவர்கள் குணாதிசயங்கள் யாவை ?

4. நாம் மும்பையில் இருந்த காலகட்டத்தில், நண்பர்கள் நாங்கள் தாராவிக்கு விசிட் அடிக்கும்போது, எங்கள் அழைப்பை நீ ஒரு தடவை கூட ஏற்றதில்லை ! என்ன காரணம் என்று இப்போதாவது கூறலாமே ?

என்றென்றும் அன்புடன்
பாலா

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment!

dondu(#11168674346665545885) said...

கலக்கல் பதில்கள் பாலா அவர்களே. நீங்கள் சொல்வதும் உண்மைதான், மகள்களின் பிறந்த நாளை மறக்க அவர்கள் விடமாட்டார்கள். மற்றப்படி உங்கள் மனைவி விஷயத்தில் அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மயிரிழையில் தப்பினீர்கள்.

சங்கர் என்ன பதில் சொல்கிறார் என்பதை பார்க்கும் ஆவலில் உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Simulation said...

மனைவியின் பிறந்தநாளை நினவில் வைத்துக் கொள்வது மிகவும் சுலபம்.

ஒரே ஒரு முறை மறந்துவிடுங்கள்:)

said...

பாலா ,

நன்றி மற்றும் கண்டனங்கள்.
நன்றி என்னை கூப்பிட்டதற்கு. கண்டனங்கள் 4 கேள்விகள் என்ற விதியை!? மீறி உப கேள்விகளுடன் 8 கேள்விகள் கேட்டதற்கு.

டோண்டு ,

நன்றி

இப்படி பில்ட் அப் கொடுக்காதீங்க :)

அன்புடன்...ச.சங்கர்

ச.சங்கர் said...

http://ssankar.blogspot.com/2008/06/blog-post.html..இந்தப் பதிவுல பதில் சொல்லியிருக்கேன். பதிவர் பட்டையைக் காணோம் .அதனால தமிழ் மணத்துல இணைக்கலை.சிரமம் பார்க்காமல் போய் படித்து விடு. :)

ரவி said...

முதல் பதில்ல ஒரு 'த்' சேர்க்கனும்...சேர்த்துக்கவா ??

பர்த்த்ட்டே மேட்டர் சூப்பர். அந்த விஷயத்தில் நான் எஸ்கேப்...என்னுடைய மனைவி பர்த்துடேயும் என்னுடையதும் ஓரே வாரத்துல வருது :))

பழைய லிங்ஸ் எல்லம் அருமை...!!!

dondu(#11168674346665545885) said...

//முதல் பதில்ல ஒரு 'த்' சேர்க்கணும்...சேர்த்துக்கவா ??//
தாராளமா சேத்துக்கலாம். ஆனாக்க முதல் உயிர்மெய் எழுத்தையும் அதேசமயம் ஒரு நெடில் உயிரெழுத்தாக மாற்றாதவரைக்கும் சரிதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,
வருகைக்கு நன்றி. செந்தழல் ரவிக்கு உங்களின் பதில் அருமை :)

சிமுலேஷன்,
வாங்க, நல்லா இருக்கு உங்க ஐடியா ;-)

சங்கர்,
சிரமம் பார்க்காமல், பதிலளித்ததற்கு நன்றி. வாசிக்க சுவாரசியமாகவே இருந்தது ! என் வலைப்பதிவில் மறுபதிப்பு செய்துள்ளேன்.

ரவி,
வாங்க, பாராட்டுக்கு நன்றி. 'த்' மேட்டர் விளையாட்டுக்கு நான் வரலை:)

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails